Monday 5 March 2018

பொங்கலோ பொங்கல்

 பொங்கல் வரும் பின்னே. வீடு பளபளக்கும் முன்னே.

 பொங்கலுக்கு ஒரு மாதம் முன்னரே வீட்டை சுத்தப்படுத்தும் வேலை தொடங்கி விடும்.

தை மாதம் அன்று காலை எழுந்ததும் முதல் வேலை கோலம் இட்டு வாசலை அலங்கரிப்பதே. 

நான் வரைந்த கோலம் அழகாக இருக்கின்றதா. போட்டு முடிந்து வர்ணம் தீட்டி எழும்பும் போது அப்பாடா முதுகு ஒடிஞ்சிட்டு போங்க.

பிரச்சனையா நோ பிராப்ளம்

 பிரச்சனை இல்லாதவங்க இந்த உலகத்தில் யாரும் இல்லை. ஆனால், அதை எடுத்துக் கொள்ளும் விதம் தான் வேறுபடுகின்றது.

நீங்கள் உங்க கடமையை சரியாக செய்யுங்கள். நடப்பதை நல்லதாக எடுத்துக்கொள்ளுவோம்.

எப்போதும் உங்கள் பிரச்சனையை மட்டும்  நினைத்துக் கொண்டிராமல்  கொஞ்சம் மற்றவங்களையும் திரும்பிப் பாருங்கள்.

நினைத்துப் பார்க்க நிறைய நல்ல விஷயங்கள் நம் வாழ்வில் இருக்கத்தான் செய்யும். அதை திரும்பவும் அசை போட்டுப் பாருங்கள்.

சின்ன சின்ன சந்தோஷங்களை கொண்டாடி மகிழுங்கள். அது நம்மை உற்சாகப்படுத்தும்.

தினமும் தவறாமல் யோகா, தியானம் செய்து வாருங்கள். அது நம் மனதை வலுப்படுத்தும்.

நல்ல எண்ணங்களை வளர்க்கும் புத்தகத்தை படியுங்கள். யாரோடு பேசினால் மனம் தெளிவடையும் என நினைக்கிறீர்களோ  அவர்களோடு   அளவளாவி மகிழுங்கள். 

 மனசு சரியில்லையா  குளிர்ந்த நீரில் சாவகாசமாக குளித்து விட்டு, அழகிய ஆடையை உடுத்தி, அருகில் எங்காவது வெளியே சென்று வாருங்கள்.

உங்களை கண்ணாடியில் பார்த்து," நான் அழகாக இருக்கிறேன். ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னால் எல்லாம் முடியம்." என்று தன்னம்பிக்கையோடு  உச்சரியுங்கள்.

சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். சிரித்த முகம் அனைவருக்கும் பிடித்தமானது அல்லவா. சிரிக்கும் போது நீங்கள் எத்தனை அழகாக இருக்கின்றீர்கள்? என்பதை   கண்ணாடியில் பாருங்கள். உங்களுக்குப் பொருத்தமான சிரிப்பை எப்போதும் முகத்தில் ஒட்ட வைத்து கொள்ளுங்கள்.

ஒரே வேலையைத் தொடர்ச்சியாக செய்யாமல்   இடையே கொஞ்சம் இடைவெளி கொடுங்கள். இது அலுப்பு தட்டுவதை தவிர்க்கும்.

 நெஞ்சில்  நிறைந்த பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

சிறந்த நண்பர் அல்லது அன்பான உறவினரோடு மனம் விட்டுப் பேசுங்கள்.

குட்டிக் குழந்தைகளோடு கொஞ்சிப் பேசி ,விளையாடி மகிழுங்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா.

 நடப்பதெல்லம் நல்லதாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள்.
நம்பிக்கையே வாழ்க்கையின் திறவுகோல்.