Wednesday 18 July 2018

பிம்பம்

உங்களுடைய‌   பிம்பம் தான் உங்களுடைய‌   குழந்தை. அவன் உங்களது சாயலில் இருந்தால் உங்களுக்கு தனி மகிழ்ச்சி தானே.

உங்களைப் பார்த்து தான் அவன்  கற்றுக் கொள்கிறான். நீங்கள் சிரித்தால் அவனும் சிரிப்பான். நீங்க‌ முகம் சுருங்கினால் அவனும் முகம் சுருங்குவான்.

ஐந்து மாதத்தில் குழந்தை கோபப்பட்டால்,
" பாருங்க‌. இத்தனூன்டு இருந்துகிட்டு கோபத்தை"
என்று நீங்கள்  அந்தக் கோபத்தை ரசித்தால், புகழ்ந்தால் அது  அந்தக் கோபத்தை வளர்ப்பது போல‌ ஆகும்.

வாயால் அறிவுரைகள் கூறுவதை விட‌ உங்கள் செய்கையால் முன் மாதிரியாக‌ நடந்து கொள்ள‌ வேண்டும். அதைப் பார்த்தே  குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.

குழந்தைங்ககிட்ட‌ தத்தா பாட்டியை உயர்வாகப் பேசுங்கள்.
அம்மா, அப்பாவையும்
அப்பா அம்மாவையும்
பெருமையாகக்  கூறுங்கள்.

பெரியவங்களை மதிக்கக் கற்றுக் கொடுங்கள். வயதானால் கை நடுங்கும். நினைவு மறதி வரும். வாய் குளறும். அதைப் புரிந்து கொள்ளப் பழக்குங்கள். முதுமையை கொண்டாட‌  கற்றுக்கொடுங்கள்.

 குடும்ப‌ வரலாற்றை உயர்வாகக் கூறுங்கள்.

நம் நாட்டை, மொழியை, இலக்கியத்தை
அபிமன்யூவின் வீரத்தை
அரிச்சந்திரனின்  வாய்மையை
கர்ணனின்  கொடையை
விரிவாகக் கூறுங்கள்.




அனைத்து உயிரினங்களையும் நேசிக்க சொல்லிக் கொடுங்கள்.

எல்லோரும் நல்லவங்களாக‌ இருக்கும் போது நாமும் நல்லவங்களாக‌ இருப்பது  சுலபம். எல்லோரும் கஷ்டமானவங்களாக‌ இருக்கும் போதும் நாம் நல்லவங்களாக‌ இருப்பது தான் ஆரோக்கியமான‌ சிந்தனை.

அப்போது தான் நாம்  நல்ல‌ பயிரை விதைத்ததாக‌ அர்த்தம். நல்ல‌ பயிரை விதைப்போமா...




No comments:

Post a Comment