Saturday 21 July 2018

மௌனமொழி

மௌனம் அது ஒரு மொழி.  அதற்கு பல‌ அர்த்தம் உண்டு.

குழந்தைக்கு  மௌனத்தை ரசிக்க‌ பழக்குவோம். செடி, மரம், பறவையை  உற்று  நோக்கச் சொல்லுங்கள்.

 பஞ்சுப்பொதி போன்ற‌ மேகத்தை, அதிலே தோன்றும் கற்பனை உருவங்களை கவனிக்க‌ கற்றுக் கொடுங்கள்.

எறும்புகளின் வரிசையை, சுறுசுறுப்பைப் பற்றி வியந்து  பாராட்டிப் புரிய‌ வையுங்கள்.

பெரிய‌ பெரிய‌ கட்டிடங்களை மட்டும் தான் அண்ணாந்து பார்த்து ரசிக்க‌ வேண்டுமா?



ஆறு , கடல், காடு  இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று அவற்றை கண்டு களிக்க‌ பழக்குங்கள். பார்த்து  புரிந்து கொள்ளட்டும் இயற்கையின் அற்புதத்தை.

இயற்கையை ரசிக்க‌ இசைந்து வாழ‌ பழக்குங்கள்.

  இதுவும் ஒருவித‌ கல்வியே.

2 comments:

  1. அழகழகான கருத்துகளை இடுகைகளாக்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் சகோதரி.

    ReplyDelete
  2. அன்புத் தோழி இமா பாராட்டுக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete